• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய பெண்கள் விரும்புவது ஏன்?

Byadmin

May 26, 2026


ரான்வியா, அறுவை சிகிச்சை, மார்பகச் சுருக்க அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Ranvia

படக்குறிப்பு, மார்பக அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தனது மார்பகங்களின் அளவில் ஏற்பட்ட மாற்றம், மற்றவர்கள் தன்னை பார்க்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதாக ரான்வியா கூறுகிறார்

    • எழுதியவர், ரேச்சல் ஃப்ளின்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தனது 11-ஆவது வயதில் ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் தன்னை நோக்கி கிண்டல் செய்து விசில் அடித்ததை இன்னும் ரன்வியாவால் மறக்க முடியவில்லை.

அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு மாதவிடாய் தொடங்குகையில் மார்பகங்களின் அளவு காரணமாக, பிறர் தன்னை நோக்கும் பார்வையும் தன்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை பாதிக்கத் தொடங்கியதாக அவர் நினைவுகூர்கிறார்.

பள்ளியில், ரன்வியாவின் மார்பகங்களைக் கிண்டல் செய்த சிறுவர்கள் மார்பகங்களுக்கு பட்டப்பெயர்களை வைத்ததோடு, சில நேரங்களில் அனுமதியின்றி அவற்றைத் தொடவும் செய்துள்ளனர்.

“நான் அப்போது விவரமறியா குழந்தையாகவே இருந்தேன்” என்கிறார் ரன்வியா. “திடீரென்று என்னுடைய உடலில் பெரிதாகத் தொடங்கிய பாகம், பிறரின் கவனத்தை என் மீது திருப்பியது, அதை எதிர்கொள்ள நான் உணர்வுப்பூர்வமாக தயாராக இருக்கவில்லை.”

ரான்வியா, அறுவை சிகிச்சை, மார்பகச் சுருக்க அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Ranvia

படக்குறிப்பு, அறுவைச் சிகிச்சைக்கு முன்பு எடுக்கப்பட்ட ரன்வியாவின் புகைப்படம். பள்ளியில் சிறுவர்கள் தன் அனுமதியின்றி தன்னுடைய மார்பகங்களைத் தொடுவார்கள் என்று கூறுகிறார்

லெஸ்டர் நகரில் உள்ள தெற்காசியக் குடும்பம் ஒன்றில் வளர்ந்த ரன்வியா, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, தனது சக மாணவிகளைப் போல தன்னால் ஆடை அணிய முடியாததால் ஏற்பட்ட சங்கடத்தை நினைவு கூர்கிறார்.

By admin