0
உலகின் மாறிவரும் காலநிலை மாற்றங்களால் தாஜ் மஹால் உள்ளிட்ட உலக மரபுடைமைத் தலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஐ.நா கலாசார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான உலக மரபுடைமைத் தலங்கள் வெள்ளம் தொடர்பான பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, அதிகரிக்கும் வெப்பநிலை, கடும் வானிலை மாற்றங்கள் ஆகியவை தற்போது அடிக்கடி நிகழ்வதை அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்புடைய செய்தி : காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க இளவரசர் வில்லியம் அழைப்பு!
கடல்சாரா மரபுடைமைத் தலங்களில் 70 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் நீரால் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
அதையொட்டி, ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனம் (UNESCO) ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வில் அச்சுறுத்தல் அதிகமுள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவையாவன…
1. தாஜ்மஹால், இந்தியா – அதிகரிக்கும் தூய்மைக்கேடு, குறையும் நிலத்தடி நீர் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.
2. யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா, அமெரிக்கா – பெரும் வெள்ளத்தால் ஒரு முறை மூடப்பட்டது.
3. ஈராக்கின் சதுப்பு நிலம், ஈராக் – நீர் நெருக்கடி அதிகரிப்பதால் பாதிக்கப்படுகிறது.
4. விக்டோரியா அருவி, சாம்பியா, சிம்பாப்வே எல்லைப்பகுதி – கடும் வரட்சி காரணமாக சில நேரங்களில் துளித் துளியாக மட்டுமே நீர் சொட்டுகிறது.
5. சான் சான், பெரு – 1,000 ஆண்டுகள் பழமையான இந்நகரம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.