• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

முதலைகள் நிறைந்த நதியில் ‘ஆபத்தான’ போலீஸ் ஆபரேஷன் – முதலை வயிற்றில் மீட்கப்பட்டது தொழிலதிபர் உடலா?

Byadmin

May 6, 2026


முதலைகள் நிறைந்த நதியில் ஆபத்தான போலீஸ் ஆபரேஷன் – முதலை வயிற்றில் மீட்கப்பட்டது தொழிலதிபரின் உடல் பாகங்களா?

பட மூலாதாரம், South african police service

தென்னாப்பிரிக்காவில் சடலத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலைகள் நிறைந்த ஆற்றில் ஹெலிகாப்டரிலிருந்து தான் கீழே இறக்கப்பட்ட தருணத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலதிபர் ஒருவரை முதலை ஒன்று விழுங்கிவிட்டதான சந்தேகத்தில், அந்த முதலையைப் பிடிக்கும் பணி கேப்டன் ஜோஹன் போட்ஜிட்டர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

“அந்த முதலை ஒரு தீவில் படுத்துக் கிடந்தது… வான்வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் அதை நெருங்க முடியாது என்ற சூழ்நிலை” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த துணிச்சலான நடவடிக்கையில், 4.5 மீட்டர் நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட அந்த முதலையின் உடலுக்குள் இருந்து மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை யாருடையது என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம், வெள்ளம் பெருக்கெடுத்தோடிய கோமடி ஆற்றில் தாழ்வான பாலத்தைக் கடக்க முயன்றபோது கார் ஒன்று சிக்கிக்கொண்டது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கார் காலியாக இருந்தது, அதில் யாரும் இல்லை. இதனால் காரில் இருந்தவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.

By admin