பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. மூத்த தலைவரான சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் புதிய முதல் மந்திரியாக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜேந்திர யாதவ், விஜய் சவுத்ரி ஆகியோர் துணை முதல் மந்திரிகளாகப் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 பேர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 11 பேர், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியைச் சேர்ந்த 2 பேர், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பாட்னாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நிதின் நவீன், உள்துறைமந்திரி அமித்ஷா, முன்னாள் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.