• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறித்து துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது?

Byadmin

Oct 18, 2026


மும்பையில் இந்தி நடிகரை குறிவைத்து துபபாக்சிச் சூடு - காவல்துறை கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் அவரது ஓட்டுநர் காயமடைந்தார்.

பிபிசி நியூஸ் மராத்தியின் தகவல்படி, மும்பை ஜூஹூ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மும்பை மேற்கு மண்டலம் 2-ன் காவல் துணை ஆணையர் மோஹித் கார்க், டைகர் ஷெராஃப் சம்பந்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

மும்பை காவல்துறையின் தகவல்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தௌஸும் ஒருவர்; அவரது இடது கையில் குண்டு பாய்ந்துள்ளது.

காவல் துணை ஆணையர் மோஹித் கார்க் கூறுகையில், “டைகர் ஷெராஃப் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் மீது குண்டு பாயவில்லை, அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தச் சம்பவம் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர் தனிப்பட்ட வேலைக்காக அங்கு வந்திருந்தார். வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

By admin