0
‘ஒரு நொடி’ மற்றும் விரைவில் வெளியாகும் ‘ஜென்ம நட்சத்திரம்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் தமன் அக்ஷன் மற்றும் இயக்குநர் மணிவர்மன் மூன்றாவது முறையாக இணையும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர் தாஸ் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் தமன் அக்ஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
‘ஒரு நொடி’, ‘ஜென்ம நட்சத்திரம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பி. மணிவர்மன் இயக்குகிறார். இரண்டு பாகமாக தயாராகும் இந்த திரைப்படத்தின் கதை , திரைக்கதையை நடிகர் தமன் அக்ஷன் எழுதியிருக்கிறார்.
இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் , இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும், இந்த திரைப்படமும் குற்ற சம்பவத்தை புலனாய்வு செய்யும் திரில்லராக தயாராகிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.