• Thu. Jul 9th, 2026

24×7 Live News

Apdin News

மூளையை உண்ணும் அமீபா: இந்தியா உட்பட உலகம் முழுவதும் அதிகமாகிறதா?

Byadmin

Jul 9, 2026


கருப்பு பின்னணியில்  ஒரு கோமாளி போன்ற பாவனையுடன் இருக்கும், "மூளையைத் உண்ணும் அமீபா" என்றும் அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லெரியின் பெரிதாக்கப்பட்ட காட்சி

பட மூலாதாரம், Bruno da Rocha-Azevedo, Herbert B. Tanowitz and Francine Marciano-Cabral / Interdisciplinary Perspectives on Infectious Diseases

படக்குறிப்பு, பொதுவாக ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லெரி, மூளை திசுக்களைத் தாக்குகிறது

கோஸ்டாரிகாவிற்கு மகிழ்ச்சியான குடும்பச் சுற்றுலாவாக அமைந்திருக்க வேண்டிய ஒரு பயணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே, தனது ஒரே மகன் இறந்ததால் ஸ்டீவ் ஸ்மெல்ஸ்கி அழுதுகொண்டிருந்தார்.

அப்போது 11 வயதாக இருந்த ஜோர்டான், பொதுவாக “மூளையை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லெரியால் ஏற்பட்ட மூளைத் தொற்றால் இறந்து போனார்.

பொதுவாக வெப்பமான ஏரிகள், வெந்நீர் ஊற்றுகள் மற்றும் கைவிடப்பட்ட நீச்சல் குளங்களில் காணப்படும் இந்த அமீபா, மக்கள் தண்ணீரில் குதிக்கும் போது நாசித் துவாரங்கள் வழியாக உடலுக்குள் நுழைகிறது, மூளை திசுக்களை வேகமாகத் தாக்கத் தொடங்குகிறது.

“ஜோர்டான் ஒரு நாள், ஒரே ஒரு முறை நீந்தினான், [இப்போது] அவன் இல்லை,” என்று 67 வயதான ஸ்டீவ் பிபிசி உலக சேவையிடம் கூறுகிறார்.

கடந்த ஆண்டு, இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நெக்லேரியா ஃபோவ்லெரி தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இது உலகளவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பாரிய பரவலாகும். மேலும் சமீபத்திய மாதங்களிலும் இந்தியாவில் பாதிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு முன்பு உலகம் முழுவதும் 500-க்கும் குறைவான பாதிப்புகளே கண்டறியப்பட்டிருந்தன.

By admin