• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

மெக்கென்னா வெஸ்ட்: பெற்றோரின் கருக்கலைப்பு கோரிக்கையை மறுத்து குழந்தை பெற்றெடுத்த வாடகை தாய் நீதிமன்றத்தை நாடியது ஏன்?

Byadmin

Sep 15, 2026


வாடகைத் தாய் மெக்கென்னா வெஸ்ட், தம்பதியின் விருப்பத்துக்கு மாறாக குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதன் காவல் உரிமையைக் கோரி வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாடகைத் தாய் மெக்கென்னா வெஸ்ட், தம்பதியின் விருப்பத்துக்கு மாறாக குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதன் காவல் உரிமையைக் கோரி வருகிறார்.

    • எழுதியவர், மேட்லின் ஹால்பர்ட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தங்களுக்கு குழந்தையைப் பெற்றுத்தருவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட பெற்றோர் கருக்கலைப்பு செய்யக் கோரியதை மறுத்த வாடகைத் தாய், குழந்தை ‘யார் பாதுகாப்பில் இருப்பது’ என்ற உரிமை தொடர்பான இந்த விவகாரத்தில் தலையிடுமாறு அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தம்பதி ஓமர் அகமது மற்றும் நவ்ஷீன் கில்கருக்கு குழந்தையின் மீதான பெற்றோர் உரிமையை வழங்கிய முந்தைய நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கோரி, அவசர மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் மெக்கென்னா வெஸ்ட் செய்துள்ளார்.

20 வார கர்ப்பகால ஸ்கேனில் கருவுக்கு கடுமையான இதயக் குறைபாடு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்யுமாறு வெஸ்டிடம் அகமது மற்றும் கில்கர் கேட்டிருந்தனர்.

ஆனால், பல குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ள வெஸ்ட், கருக்கலைப்புகள் ஏறத்தாழ முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள டெக்சாஸுக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அகமது மற்றும் கில்கரின் வழக்கறிஞர்களிடம் பிபிசி கருத்துக் கேட்டுள்ளது.

By admin