• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

2-ஆவது டி20 போட்டி: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Byadmin

Sep 15, 2026


இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டி, டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்திய அணி தடுமாற்றம்:

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

காயம் காரணமாக ஹா்திக் பாண்டியா இந்தத் தொடரில் விளையாடாத நிலையில், 5-ஆவது பந்துவீச்சாளர் வாய்ப்புக்கு பொருத்தமான வீரா் இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது. பேட்டிங்கில் அபிஷேக் சா்மா, இஷான் கிஷண் உள்ளிட்டோரும், பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோரும் பலம் சோ்க்கின்றனா்.

தொடரில் இருந்து விலகல்:

சஞ்சு சாம்சன் நல்லதொரு இன்னிங்ஸை மீண்டும் வழங்க வேண்டிய எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே உள்ளது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவா்த்தி இடுப்பு பகுதி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) விலகினாா்.

ஏற்கெனவே காயத்தில் இருந்து மீண்டு வந்த அவா், தற்போது மீண்டும் காயம் அடைந்துள்ளதால், இந்தத் தொடர் மட்டுமின்றி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

By admin