• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

எச்.ஐ.வி.க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட எலைட் கண்ட்ரோலர்களின் கதை – அவர்கள் உடலில் என்ன நடக்கிறது?

Byadmin

Sep 15, 2026


எச்.ஐ.வி.க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட எலைட் கண்ட்ரோலர்களின் கதை - அவர்கள் உடலில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், amfAR

படக்குறிப்பு, எந்தவொரு மருந்தும் எடுத்துக் கொள்ளாமலேயே பல தசாப்தங்களாக லொரீன் வில்லன்பெர்க் இயல்பான வாழ்க்கையை வாழ முடிந்துள்ளது.

    • எழுதியவர், டேவிட் காக்ஸ்
    • பதவி, பிபிசி பியூச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாக்ரமெண்டோ நகரில் வசித்து வந்த 71 வயதான இயற்கை நிலப்பரப்பு வடிவமைப்பாளர் லொரீன் வில்லன்பெர்க், எச்.ஐ.வி ஆராய்ச்சி நிபுணர்களிடையே கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வியக்கத்தக்கதாகவும் விசித்திரமாகவும் அறியப்பட்டு வந்தார்.

வில்லன்பெர்க்கிற்கு கடந்த 1992 ஆம் ஆண்டு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அந்த வைரஸ் அவரது நோய் எதிர்ப்புச் சக்தியைச் சிதைத்து அவரைக் கொல்லாமல், அவரது உடலில் செயலிழந்து செயலற்ற நிலையில் இருந்தது. எந்தவொரு மருத்துவச் சிகிச்சையையும் பெறாமலேயே அவர் பல தசாப்தங்களாக இயல்பான வாழ்க்கையை வாழ முடிந்தது.

“எச்.ஐ.வி தொற்றுக்கு எதிரான எனது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் தனித்துவமானது என்று எனது மருத்துவர்கள் எப்போதுமே என்னிடம் கூறுவார்கள்” என்று அவர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்த பேட்டியில் என்னிடம் தெரிவித்தார்.

“பல ஆண்டுகளாக அவர்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும், நான் மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.”

நடப்பாண்டு ஏப்ரல் மாதம் காலமான வில்லன்பெர்க், உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற “எலைட் கண்ட்ரோலர்” என்று பரவலாக அழைக்கப்படுபவர் ஆவார். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட மிகச் சிறிய எண்ணிக்கை அளவிலான நபர்களைக் குறிக்கப் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது; இவர்கள் எத்தகைய மருத்துவத் தலையீடும் இன்றித் தங்களது உடலின் மூலமாகவே வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

By admin