• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

குருகிராமில் பெண் பைக்கர் மீது கார் மோதிய வீடியோ – என்ன நடந்தது?

Byadmin

Sep 15, 2026


விபத்து,  இன்ஸ்டாகிராம், ஹரியானா, குருகிராம்,  சொகுசு கார், காவல்துறையினர்

பட மூலாதாரம், rebelwheels_sia_/Instagram

படக்குறிப்பு, விபத்துக்குள்ளான பெண் இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணாவின் குருகிராம் நகரில் உள்ள ‘கோல்ஃப் கோர்ஸ்’ சாலையில், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் மீது சொகுசு கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து குருகிராம் காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட நபரைத் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைப் பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர், தனது நண்பர் ஒருவர் இரு தினங்களுக்கு முன்பாக காரை இரவலாக வாங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இந்தக் கொடூர விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன், நகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலையுடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அந்தப் பெண் பைக் ஓட்டுநர் யார்?

இருசக்கர வாகன ஓட்டியான சியா என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

By admin