• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

ஒரு சீரியல் குற்றவாளியை மணம் முடிக்க இருந்த பெண் தனது அன்புக்குரியவர்களால் தப்பிய கதை

Byadmin

Sep 14, 2026


வலதுபுறம் உள்ள கிறிஸ்டோபர் மால்கம், தனது முன்னாள் வருங்கால மனைவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பிபிசியிடம் தனது கதையைப் பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண் தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.
படக்குறிப்பு, வலதுபுறம் உள்ள கிறிஸ்டோபர் மால்கம், தனது முன்னாள் வருங்கால மனைவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பிபிசியிடம் தனது கதையைப் பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண் தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

    • எழுதியவர், மேரி மெக்கேல்
    • பதவி, பிபிசி ஸ்காட்லாந்து
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்தக் கட்டுரையில் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன; இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

தனது குடும்பத்தினரும் நண்பர்களும் தலையிட்டு உதவாமல் இருந்திருந்தால், தன் வாழ்நாள் முழுவதுமே தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்த அந்த மனிதனையே தான் திருமணம் செய்திருப்பேன் என்று ஏமி கூறுகிறார்.

ஒருவேளை அந்தத் திருமணம் நடந்திருந்தால், அவர் தன்னை கொலை செய்திருப்பார் என்று அந்தப் பெண் அஞ்சுகிறார்.

சமீபத்தில் தனது குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட தொடர் வல்லுறவு குற்றவாளியான கிறிஸ்டோபர் மால்கம், அவருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் அளித்த தகவலின்படி, தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்த தனது தந்தையை தந்தையர் தினத்தன்று பார்ப்பதற்குச் செல்வதற்குச் சற்று முன்பு, மால்கம் அவரது முகத்தில் “காயங்கள் ஏற்படும் வகையில்” அடித்துள்ளார்.

By admin