• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

Abu Dhabi Prince இந்திய டிரைவருக்கு நன்றி: விமானத்தில் இருந்து இறங்கி கைகுலுக்கி பேசிச் சென்ற ஷேக் காலித் வைரல் வீடியோ

Byadmin

Sep 14, 2026


டிரைவரை பாராட்டிய இளவரசர்

இந்த நிலையில் மாநாடு முடிந்து தனது நாட்டிற்கு திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு ஷேக் காலித் தனது காரிலிருந்து இறங்கி வந்தார். அப்போது அவர் புறப்படுவதற்கு தயாராக தனது விமானத்தில் ஏற முயன்றார்.

விமானம் புறப்படவிருந்த நேரத்தில், அதன் படிகளில் ஏறிய அவர், திடீரென விமானத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது அவர் திரும்பி, காரை நோக்கி நடந்து சென்று இந்திய ஓட்டுநருடன் கைகுலுக்கி, புறப்படுவதற்கு முன்பு அவரிடம் சில வார்த்தைகளை பேசினார்.

இதையடுத்து அவரது இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர், தனது ஓட்டுநரை நேரில் அங்கீகரிக்க நேரம் ஒதுக்கியதற்காக அவரை பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.

By admin