• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக அரசு மீதான இடதுசாரிகளின் அணுகுமுறை எப்படி இருக்கும்? மு.வீரபாண்டியன் தகவல்

Byadmin

Sep 14, 2026


தவெக Vs இடதுசாரி

பட மூலாதாரம், X

படக்குறிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் அதே வேளையில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றனர்.

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் இடதுசாரிகள் வேட்பாளர்களை களமிறக்குகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், தங்கள் நிலைப்பாடு (அரசுக்கு ஆதரவு, அமைச்சரவையில் பங்கு இல்லை, கூட்டணியில் இல்லை, தேர்தலில் எதிர்த்துப் போட்டி) என்பது தெளிவாக இருப்பதாக இடதுசாரி கட்சிகள் கூறுகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும் போட்டியிடுகின்றன. தாங்கள் எந்த கூட்டணியிலும் தற்போது இல்லை என்பதால் தனித்துப் போட்டியிடுவதாக இரு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அதேவேளையில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

‘அரசியல் அறமற்ற செயலால் இடைத்தேர்தல்’

தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரத்தில் வென்ற சத்தியபாமாவும் மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமரவேலுவும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். தற்போது அவர்கள் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

“இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். அரசியல் அறமற்ற செயலால் ஏற்பட்டது இது” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தை முன்வைக்கிறது.

By admin