• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

மெக்சிகோ – தென் ஆப்ரிக்கா மோதிய முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டு – என்ன நடந்தது?

Byadmin

Jun 12, 2026


கால்பந்து உலகக் கோப்பை,  ரெட் கார்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெம்பா ஸ்வானேவுக்கு ‘ரெட் கார்ட்’ காட்டும் நடுவர்

    • எழுதியவர், டேல் ஜான்சன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகக்கோப்பை போட்டிகள் என்றாலே ‘ரெட் கார்டு’ (Red Card) அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலம் எப்போதோ மலையேறிவிட்டது, அல்லது நாம் அப்படித்தான் நினைத்தோம்.

வியாழக்கிழமை (ஜூன் 11) நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தின் தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் மூன்று முறை ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் யாயா சிதோல் மற்றும் தெம்பா ஸ்வானே ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (stoppage time) மெக்சிகோவின் சீசர் மான்டெஸ் வெளியேற்றப்பட்டார்.

ரஷ்யா மற்றும் கத்தாரில் நடந்த உலகக்கோப்பை தொடர்களில் தலா 4 ரெட் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. 2026 தொடர் ஏற்கனவே அந்த எண்ணிக்கையை நெருங்கிவிட்டது. ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

2006 உலகக் கோப்பைத் தொடரில், ஒட்டுமொத்தமாக 28 வீரர்களுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது. அது ஒரு அசாதாரணமான தொடராகும், அதில் மூன்று வெவ்வேறு போட்டிகளில் தலா மூன்று வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தில் அதிகபட்சமாக நான்கு ரெட் கார்டுகள் காட்டப்பட்டதே சாதனையாக உள்ளது.

By admin