• Mon. Jul 20th, 2026

24×7 Live News

Apdin News

மெஸ்ஸி புதிய வரலாறு படைப்பாரா? உலகக் கோப்பையில் கடைசி ஆட்டம் இதுதானா?

Byadmin

Jul 19, 2026


வரலாற்று சாதனையின் விளிம்பில் மெஸ்ஸி -  இது அவரது கடைசி உலகக் கோப்பையா?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அர்ஜென்டினா விளையாட்டு வரலாற்றில் அழியாத இடம்பிடிக்கும் சாதனையிலிருந்து இன்னும் ஒரு வெற்றி தூரத்தில் உள்ளது.

அர்ஜென்டினா அணி, தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற மூன்றாவது அணியாக மாறும் இலக்குடன் உள்ளது. இதற்கு முன் இத்தாலி (1934, 1938) மற்றும் பிரேசில் (1958, 1962) மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளன.

ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டுமெனில், லியோனல் மெஸ்ஸி மீண்டும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.

மெஸ்ஸிதான் எல்லா காலத்திலும் சிறந்த வீரரா?

இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் எதுவாக இருந்தாலும், அது பல மணி நேரங்கள் விவாதிக்கப்படக்கூடிய விஷயமாக இருந்தாலும், அர்ஜென்டினாவின் இந்த மாயாஜால வீரர் கால்பந்து மைதானத்தில் கால் பதித்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் மறுப்பு இல்லை.

By admin