• Mon. Jul 7th, 2025

24×7 Live News

Apdin News

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 58,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் | water released into Cauvery from Mettur dam

Byadmin

Jul 7, 2025


மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி ஆற்​றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 40,500 கனஅடி​யாக​வும், மாலை 50,500 கனஅடி​யாக​வும் பதி​வானது. அணைக்கு நீர்​வரத்து உயர்ந்​துள்ள நிலை​யில், அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடி​யாக​வும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று 57 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்​தது. கபினி அணை​யில் இருந்து வரும் நீரின் அளவு மற்​றும் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் பெய்து வரும் மழை​யின் அளவு மாறு​படு​வ​தால் நீர்​வரத்து அதி​கரிப்​பதும், குறைவது​மாக உள்​ளது. எனினும், நீர்​வரத்து குறிப்​பிட்ட அளவுக்கு மேல் உள்​ள​தால், அருவி மற்​றும் ஆறுகளில் குளிக்க விதிக்​கப்​பட்​டுள்ள தடை நீடிக்​கிறது. ஒகேனக்​கல்​லில் காவல், தீயணைப்​புத் துறை​யினர் மற்​றும் ஊர்க்​காவல் படை​யினர் தொடர்ந்து கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.



By admin