• Sat. Jul 5th, 2025

24×7 Live News

Apdin News

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: 30,000 கன அடியாக அதிகரிப்பு | Water release from Mettur Dam

Byadmin

Jul 5, 2025


மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 19,286 கனஅடி​யாக​வும், மதி​யம் 24,735 கன அடி​யாக​வும், மாலை 29,423 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

இந்​நிலை​யில் மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியி​லிருந்து 30,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக விநாடிக்கு 22,100 கனஅடி​யும், 16 கண் மதகு வழி​யாக 7,900 கனஅடி​யும் தண்​ணீர் வெளி​யேற்​றப்​படு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கன அடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 119.63 அடி​யாக​வும், நீர் இருப்பு 92.88 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் 20 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடி​யாக​வும், இரவு 50 ஆயிரம் கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. நீர்​வரத்து உயர்வு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி​யிலும், அருவி​களிலும் குளிக்​க​, பரிசல் இயக்​க​ தருமபுரி மாவட்ட நிர்​வாகம் அறி​வித்த தடை தொடர்ந்து அமலில் உள்​ளது.



_share_save_container addtoany_content addtoany_content_bottom">

By admin