கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
மேர்வின் சில்வா, 2010 மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் 2012 மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நீதிபதி விடுமுறையில் உள்ளதால் இந்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 03 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையும் 28 ஆம் திகதி! appeared first on Vanakkam London.