• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

மேற்கு ஆர்க்டிகா: உலக வரைபடத்தில் இல்லாத நாடுக்கு தூதரகம் – டெல்லியில் வினோத மோசடி

Byadmin

Jul 24, 2025


குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு ஆர்க்டிகா, சபோரா, பால்வியா மற்றும் லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, போலி தூதரகம் பற்றிய முழு தகவலையும் உத்தரபிரதேச சிறப்புப் படையின் எஸ்.எஸ்.பி சுஷில் குலே வழங்கியுள்ளார்.

போலி தூதரகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேச சிறப்புப் படையின்(எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ஜூலை 22ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காஜியாபாத்தில் ஒருவரை கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு ஆர்க்டிகா, சபோரா, பால்வியா மற்றும் லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

“மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பால்வியா, லோடோனியா மற்றும் வேறு சில ‘நாடுகளின்’ தூதர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வாகனங்களில் தூதரக ரீதியிலான, போலியான எண் தகடுகள் இருந்தன, அவை எந்த அமைப்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை” என்று எஸ்டிஎஃப் எஸ்எஸ்பி சுஷில் குலே தெரிவித்தார்.

ஹர்ஷவர்தன் ஜெயின் என்ற நபர் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து போலி தூதரகத்தை நடத்தி வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

By admin