• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

மொசாட்: இஸ்ரேல் உளவு அமைப்பின் வெற்றி தோல்விக்குள்ளான முக்கிய ஆபரேஷன்கள் எவை?

Byadmin

Sep 20, 2024


ஹமாஸ் தலைவர்கள் கலீத் மிஷால் (இடது) மற்றும் யஹ்யா அய்யாஷ் (நடுவில்) மற்றும் முகத்தை மறைத்துக்கொண்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு வீரர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கலீத் மிஷால், யஹ்யா அய்யாஷ், முகத்தை மறைத்தபடி இருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்

ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டன. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

இது இஸ்ரேல் நடத்திய “திட்டமிட்ட தாக்குதல்” என லெபனான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் இதற்காக “தகுந்த பதிலடி” கொடுக்கப்படும் என்று ஹெஸ்பொலா கூறியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு இஸ்ரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக சில இஸ்ரேல் ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் பொதுவாக ஹெஸ்பொலாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வரும். இந்த தாக்குதல் இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

By admin