• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

மோதி அமெரிக்கா பயணம் – பைடன் பதவிக் காலத்தின் இறுதி நாட்களில் செல்வது ஏன்?

Byadmin

Sep 23, 2024


அதிபர் பைடனின் ஆட்சி காலத்தின் இறுதி நாட்கள்;  பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் பெற்றிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (2023)

  • எழுதியவர், ஜுபைர் அகமது
  • பதவி, பிபிசி ஹிந்தி

அமெரிக்கா தனது புதிய அதிபரை அறிவிப்பதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய நிர்வாகம் கமலா ஹாரிஸ் அல்லது டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமையும். பிரதமர் மோதியின் இந்தப் பயணத்தின் போது பல்வேறு முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

திங்களன்று ஐ.நா பொதுச் சபையில் ‘எதிர்காலத்திற்கான உச்சிமாநாடு’ (Summit of the Future) என்னும் நிகழ்வில் பிரதமர் மோதி உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்வில் பல உலகத் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். சமத்துவமின்மை, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் போன்ற முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே உச்சிமாநாட்டின் நோக்கம்.

By admin