• Tue. Sep 24th, 2024

24×7 Live News

Apdin News

மோதி-பைடன் சந்திப்பிற்குப் பிறகு சீனாவைக் கண்டித்த குவாட் அறிக்கை – என்ன நடந்தது?

Byadmin

Sep 24, 2024


அமெரிக்காவில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், விகாஸ் பாண்டே, நேயாஸ் ஃபரூகி
  • பதவி, பிபிசி செய்திகள், டெல்லி

உற்பத்தித் துறையின் இலக்காக இந்தியாவை மாற்ற, இங்குள்ள வாய்ப்புகளை ஆய்வு செய்ய தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோதி நியூயார்க் நகரில், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பேசினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மற்றும் இந்தியாவை உள்ளிடக்கிய குவாட் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் இந்த சந்திப்பை நிகழ்த்தினார் மோதி.

உலக நிறுவனங்களின் கவனத்தை இந்தியாவின் விநியோகச் சங்கிலியின் பக்கம் திருப்பவும், சீனாவுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்தியா சில காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தியா, செமிகண்டக்டர் உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிக கவனம் செலுத்தி வந்தாலும், இந்த வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் சீனா, தைவானிடம் இருந்து மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இந்தியா உள்ளது.

By admin