• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

யாஹூ பாய்ஸ்: அம்மாவை காதல் வலையில் சிக்க வைத்த நபரை தேடி கண்டம் கடந்து சென்ற மகன் கண்டுபிடித்தது என்ன?

Byadmin

Aug 18, 2026


கார்லோஸ் பராகான்.

பட மூலாதாரம், Carlos Barragán

படக்குறிப்பு, நைஜீரியாவின் லாகோஸின் இகோடுன் மாவட்டத்தில் உள்ள கார்லோஸ் பராகான்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“அவர்கள் அவ்வளவு நுட்பமானவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் அவ்வளவு புத்திசாலிகளாக இருப்பார்கள் என்றும் நினைக்கவில்லை… அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது”.

தனது தாயைக் காதல் மோசடியில் குறிவைத்த நபரைத் தேடி கார்லோஸ் பாராகன் நைஜீரியா சென்றபோது, திறமையான மோசடியாளரை எதிர்கொள்ள போகிறோம் என்றே அவர் எதிர்பார்த்தார்.

அவரது தாயை ஏமாற்றிய மின்னஞ்சல்கள், அந்த நபர் கூறியபடி சிரியாவில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரிடமிருந்து வரவில்லை என்றும், நைஜீரியாவில் இருந்து வந்ததாகவும் ஒரு ஐபி முகவரி மூலம் தெரியவந்திருந்தது.

ஆனால், ஒரு திறமையான குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, நைஜீரியாவின் ‘யாஹூ பாய்ஸ்’ குறித்து புரிந்துகொள்ளும் நான்கு ஆண்டுகால பயணத்தில் கார்லோஸ் ஈடுபட்டார்.

கல்வி வாய்ப்புகள் குறைவாகவும், பணமின்றியும், வாழ்க்கையில் அதிக வாய்ப்புகள் இல்லாமலும் இருக்கும் இளம் மோசடியாளர்கள்தான் பெரும்பாலும் ‘யாஹூ பாய்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

By admin