• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

யுக்ரேன் போர்: இந்தியாவின் ஆயுத விநியோக கொள்கை என்ன? ஆயுதங்களை வழங்கியதா?

Byadmin

Sep 23, 2024


இந்திய பிரதமருடன் ரஷ்ய அதிபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமருடன் ரஷ்ய அதிபர்

ஐரோப்பா வழியாக யுக்ரேனுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“இந்திய ஆயுத உற்பத்தியாளர்கள் ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வெடிபொருட்களை விற்றுள்ளனர். இதை அவர்கள் யுக்ரேனுக்கு கொடுத்து இருக்கிறார்கள், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது” என்று செப்டம்பர் 19ஆம் தேதியன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து வரும் எதிர்ப்பையும் மீறி, இந்தியா இதற்கான எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட செய்தியை நாங்கள் பார்த்தோம். இந்தச் செய்தி பொய்யானது மற்றும் தவறாக வழிநடத்துவதாக உள்ளது. இந்தியா விதிகளை மீறியதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பது முற்றிலும் தவறு” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை அன்று கூறினார்.

By admin