0
யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து முழுமையான விளக்கத்தை அமெரிக்கா வெளியிடவில்லை.
“யுனெஸ்கோ அமைப்பில் தொடர்ந்து நீட்டிப்பது, அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உகந்ததாக இல்லை. இந்த அமைப்பு பிளவுபடுத்தும் சமூக மற்றும் கலாசார காரணங்களைப் பின்பற்றுகிறது.
“பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அனுமதிப்பது என்ற யுனெஸ்கோவின் முடிவு சிக்கலானது. அது அமெரிக்காவின் கொள்கைக்கு முரணானது. இந்த அமைப்புக்குள், இஸ்ரேல் எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றுகிறது” என டாமி புரூஸ் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் முதல் முறையாக ஜனாதியாக இருந்த போது 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜோ பைடன் ஜனாதியாக பதவியேற்ற போது மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்த நிலையில், தற்போது யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.
1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது யுனெஸ்கோவில் இருந்து முதல் முறையாக
அமெரிக்க விலகியது.