• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

யூனிட்டு ரூ.37 கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமைக்கு தமிழ்நாடு வந்தது எப்படி?

Byadmin

Oct 14, 2026


அமைச்சர் நிர்மல்குமார் (கோப்புப் படம்)

படக்குறிப்பு, மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க ஒரு யூனிட்டுக்கு ரூ.37 வரைக்கும் கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களைத் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் இறுதி செய்துள்ளது.

மின் தேவை அதிகரித்ததும், மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையும் இதற்குக் காரணம் என மின்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஆனால், மின் கொள்முதலுக்கான ஏற்பாடுகளை அரசு முன்கூட்டியே செய்திருக்க வேண்டுமென திமுகவும் அதிமுகவும் விமர்சித்துள்ளன.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 வரை

மின் கொள்முதல் ஒப்பந்த விவரங்களின்படி, அக்டோபர் 12 முதல் 31ஆம் தேதி வரை 1,500 மெகாவாட் மின்சாரத்தைத் தொடர்ந்து வாங்குவதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.31.99 முதல் ரூ.34.49 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சநேரத் தேவைக்காக 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.33.37 முதல் ரூ.37 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய தரவுகளின்படி, தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை மின்சாரம் வாங்கியதில் இதுவே அதிகபட்ச விலை. கடந்த 2022ஆம் ஆண்டில் ஒரு யூனிட்டுக்கு ரூ.24 வரை கொடுத்து மின்சாரம் வாங்கியதே முந்தைய அதிகபட்ச விலையாக இருந்தது.

By admin