• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

பெரிய மாநிலங்களின் பண வீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம் – சாமானியர்களை எப்படி பாதிக்கிறது?

Byadmin

Oct 14, 2026


இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?

“கடந்த ஜூன் மாதத்தில் முழு சாப்பாடு 80 ரூபாய்க்கு கொடுத்து வந்தோம். அரிசி விலை உயர்வால் 100 ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது முக்கியமான சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் ஒரு முழு சாப்பாட்டை 120 ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது.”

புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவகம் நடத்தி வரும் முருகேசன் என்பவரின் கருத்து இது.

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெவ்வேறு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்படுகிறது.

உணவகங்களை நம்பி இருப்பவர்கள் தொடங்கி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவதை பல தரப்பினரிடம் பிபிசி தமிழ் பேசியதிலிருந்து அறிய முடிகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

By admin