• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்: தீபாவளி முன்னிட்டு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

Byadmin

Oct 14, 2026


78 நாள் சம்பளம் போனஸ்

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்மூலம் 11.4 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.2,009 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனஸ் தொகையானது ரெயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரெயில்வே கார்டுகள், ரெயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin