• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

‘ஆடையை இழுத்தனர், பிறப்புறுப்பில் உதைத்தனர்’ – டெல்லி போலீஸ் காவலில் எடுத்தபோது என்ன நடந்தது?

Byadmin

Oct 14, 2026


அக்டோபர் 11ஆம் தேதி போராட்டத்தில் பங்கேற்ற சரண்யா, காவல்துறையினர் தன்னைத் தள்ளிப் பேருந்தில் ஏற்றியதாகவும், அப்போது தனது கால் பேருந்தின் கதவில் சிக்கிக்கொண்டதாகவும் கூறுகிறார்
படக்குறிப்பு, அக்டோபர் 11ஆம் தேதி போராட்டத்தில் பங்கேற்ற சரண்யா, காவல் துறையினர் தன்னைத் தள்ளிச் சென்று பேருந்தில் ஏற்றியதாகவும், அப்போது தனது கால் பேருந்தின் கதவில் சிக்கிக் கொண்டதாகவும் கூறுகிறார்

    • எழுதியவர், சுமேதா பால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள சில விவரங்களும் படங்களும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.)

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின்போது காவலில் எடுக்கப்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் செயற்பாட்டாளர்கள், தங்களை காவல்துறையினர் தாக்கியதாகவும், தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அச்சுறுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில போராட்டக்காரர்கள் தங்கள் உடலில் ஏற்பட்ட காயங்களையும் காட்டினர். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். பிபிசி ஹிந்தி, இத்தகைய சில மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் பேசியது.

இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் கருத்தையும் அறிய பிபிசி முயன்றது. இந்தச் செய்தி எழுதப்படும் வரை காவல்துறையிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

சரண்யா, டெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் முதுநிலை மாணவி. மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். அக்டோபர் 11ஆம் தேதி போராட்டத்தில் பங்கேற்ற அவர், காவலில் வைக்கப்பட்டபோது நேர்ந்த அனுபவங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.

By admin