• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

ஓபன்ஏஐ அலுவலகத்தில் ‘ரகசிய ஒலிப்பதிவு கருவியை’ பொருத்திய ஊழியரை ஏ.ஐ கண்டுபிடித்தது எப்படி?

Byadmin

Oct 14, 2026


சந்தேகத்துக்கு இடமான  நபர்

படக்குறிப்பு, சந்தேகத்துக்கு இடமான நபர் ரகசிய ரெக்கார்டரைச் சோதிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வெளியிட்டனர்.

    • எழுதியவர், மேக்ஸ் மாட்ஸா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கலிஃபோர்னியாவில் உள்ள ஓபன்ஏஐ அலுவலகம் ஒன்றில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவியைப் பொருத்தியதாக சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐயில் பொறியாளராகப் பணியாற்றிய அப்துல்ரஹ்மான் அல்ஃபோசான் மீது, உரையாடல்களைப் பதிவு செய்வதற்காக மின்னணு, இயந்திர அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தியதாக அல்லது பயன்படுத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தங்களது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த “அதிநவீன பதிவு செய்யும் கருவியை” கண்டறிந்ததாகவும், இதுகுறித்து எஃப்.பி.ஐ.யிடம் தெரிவித்ததாகவும் ஓபன்ஏஐ கூறியுள்ளது.

அந்தக் கருவியைத் தங்களது நிறுவன ஊழியர் ஒருவர்தான் பொருத்தியிருந்தார் என்பதைத் தங்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்திக் கண்டறிந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும் அறையில், தொலைக்காட்சியின் பின்புறத்தில் உள்ள யுஎஸ்பி இணைப்பில் கழிப்பறைக் காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் அந்தக் கருவி செருகப்பட்டிருந்ததாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

By admin