• Sat. Oct 31st, 2026

24×7 Live News

Apdin News

ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட டீசர்

Byadmin

Oct 31, 2026


தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவில் தனக்கென பிரத்யேக அடையாளத்தை உருவாக்கி இருக்கும் நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக, அதிரடி எக்சன் நாயகனாக, நடித்திருக்கும் ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நாசர், சுருதிஹாசன், யூகி சேது, நரேன், கே எஸ் ரவிக்குமார், சம்பத்ராஜ், கலையரசன், ஐரா தயானந்த், அஜய் ரத்னம், வின்சென்ட் அசோகன், திரி குன், சிங்கம் புலி, சுரேஷ் மேனன், ஷாஜி, கனிகா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

பௌசியா ஃபாத்திமா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்திருக்கிறார்.

புகையிரத பயணத்தின் போது எதிர்பாராமல் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களின் பின்னணியில் எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் . தாணு தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பிலும், விறுவிறுப்பாகவும் வைத்திருப்பதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதன் காரணமாக இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

By admin