• Thu. Jul 31st, 2025

24×7 Live News

Apdin News

ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை – என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

Jul 30, 2025


ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம், Reuters

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.

இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும்.

ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

By admin