• Fri. Jul 25th, 2025

24×7 Live News

Apdin News

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இங்கிலாந்தில் ஒருவர் கைது!

Byadmin

Jul 24, 2025


ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இங்கிலாந்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரமான உளவாளி ஜேம்ஸ் பாண்ட் போல் ஆக வேண்டும் என்று நினைத்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹோவர்ட் பிலிப்ஸ் (வயது 65) என்பவரே ரஷ்யாவுக்கு உளவு பார்த்து வந்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் குறித்த தகவல்களைச் சேகரித்து அவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஏஜன்ட்களுக்கு வழங்கி வந்தார்.

ஆனால், அவர்கள் உண்மையில், இங்கிலாந்தின் உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆவார்.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த வழக்கு நடந்து வருகிறது.

By admin