• Fri. Oct 16th, 2026

24×7 Live News

Apdin News

ராகுல் காந்தியின் மனு தொடர்பாக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

Byadmin

Oct 16, 2026


வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர மறுஆய்வு நடவடிக்கை, ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உச்ச நீதிமன்றம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வியாழக்கிழமையன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு, இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரியது. மேலும், வாக்காளர் பட்டியலின் ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ நடைமுறையின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் இணைக்குமாறு உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம் மட்டுமின்றி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இருப்பினும், நோட்டீஸ் பிறப்பித்தபோது, மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘லைவ் லா’ தகவலின்படி, அடுத்த விசாரணையின்போது மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை குறித்து விளக்கம் கோரப்படும் என நீதிபதி அமர்வு கூறியுள்ளது. தனது கருத்துக்கள் எந்த மனுதாரரை நோக்கியவை என்பதை நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

By admin