படக்குறிப்பு, ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக காவல்துறை வேனில் ஏற்றப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.
இந்த பேரணி நிதி ஆயோக் அலுவலகம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையம் இடையே வந்தபோது, டெல்லி காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பேரிகார்டுகளை அமைத்து அதைத் தடுத்து நிறுத்த முயன்றனர். காவல்துறை தடையை மீறி ராகுல் காந்தி, பேரிகார்டின் மீது ஏறி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
காவல்துறையினர் தொடர்ந்து வழிமறித்ததை அடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
ராகுல் காந்தியைத் தடுத்து வைத்த காவல்துறையினர் அவரை கிங்ஸ்வே கேம்ப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடந்த போராட்டத்தில் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது என்பதை விளக்கும் புகைப்படத்தொகுப்பு.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ராகுல் காந்தி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காவல்துறை தடுப்பில் ஏறிய ராகுல் காந்தி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காவல்துறை தடுப்பின் மீது நின்றபடி தேசியக்கொடியை அசைக்கும் ராகுல் காந்தி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா கூட்டணி போராட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிஆர்பிஎஃப் மற்றும் விரைவு அதிரடிப் படையினர்
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் ராகுல் மற்றும் பிரியங்கா
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் ராகுல் மற்றும் பிரியங்கா
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டெல்லி போராட்டக்களத்திலேயே உண்ணும் ராகுல் காந்தி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் ஒரு காட்சி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லியில் 9 மணி நேர தர்ணாவுக்கு பிறகு ராகுல் காந்தியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றிய காட்சி
பட மூலாதாரம், X/Congress
படக்குறிப்பு, டெல்லியில் 9 மணி நேர தர்ணாவுக்கு பிறகு ராகுல் காந்தியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றிய காட்சி
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டெல்லியில் 9 மணி நேர தர்ணாவுக்கு பிறகு பிரியங்கா காந்தியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிய காட்சி
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டெல்லி காவல்துறை வேனில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்
பட மூலாதாரம், X/INC
படக்குறிப்பு, ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டெல்லி காவல்துறை வேனில் ராகுல் காந்தி