• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்: ரூ.15 லட்சம் கோடி வருவாய் எப்படி வந்தது? உரிமையாளர் விளக்கம்

Byadmin

Jun 8, 2026


செபி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ரூ.15.15 லட்சம் கோடி வருவாய்

பட மூலாதாரம், Imran Qureshi

படக்குறிப்பு, செபி விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், 2020-21 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளுக்கு இடையில் 15.15 லட்சம் கோடி ரூபாய் வருவாயை மிகைப்படுத்திக் காட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறது.

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ராஜேஷ் மேத்தா அதிர்ச்சியில் இருக்கிறார். செபி அவரது நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸிற்கு ஒரு இடைக்கால உத்தரவை அனுப்பியுள்ளது.

அதில், வருவாய் ஏன் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது மற்றும் லாபம் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது என்று கேட்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஏன் இவ்வளவு சலசலப்பு ஏற்படுகிறது என்று மேத்தாவிற்குப் புரியவில்லை.

ஆனால் மேத்தா கோபமாகவும் இருக்கிறார். காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அவரது நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை ஒரு சதவீதத்தில் இருந்து 10.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்குக் பிறகுதான் எல்லாரும் அவர் மீது பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய மேத்தா, “எல்லாரும் எல்ஐசி-எல்ஐசி என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் பங்குகளை வாங்குமாறு அவர்களை கூறவில்லை. அவர்கள் கடந்த 10, 15 அல்லது 20 ஆண்டுகளில் பொதுச் சந்தையிலிருந்து பங்குகளை வாங்கியுள்ளனர். நிறுவனமோ அல்லது நிறுவனரோ அவர்களுக்குப் பங்குகளை வழங்கவில்லை” என்கிறார்.

“எங்கள் பங்குகளை எல்ஐசி அதிக விலைக்கு விற்றும் இருக்கிறது. அதற்கு நல்ல லாபமும் கிடைத்துள்ளது. எல்ஐசிக்குத் தெரியும், எங்களுக்குத் தெரியும், ஏன் பொதுமக்களுக்குக் கூடத் தெரியும் இந்த நிறுவனம் மிகவும் வலுவானது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் எல்ஐசி முதலீடு செய்துள்ளது.” என்றார் அவர்.

By admin