• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில் டைனமிக் கட்டண முறையை நீக்க ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு மனு | ABGP Consumer Organization Petition to remove dynamic fare system in trains

Byadmin

Jul 8, 2025


சென்னை: ​ராஜ்​தானி, துரந்​தோ, சதாப்தி உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் டைனமிக் கட்டண முறையை நீக்​கக் கோரி, ரயில்வே அமைச்​சருக்கு அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு நிர்​வாகி​கள் மனு அளித்​தனர். புதுடெல்​லி​யில், ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு (ஏ.பி.ஜி.பி. நுகர்​வோர் அமைப்​பு) நிர்​வாகி​கள் அண்​மை​யில் சந்​தித்​து, பிரீமி​யம் ரயி​லில் டைனமிக் கட்டண முறையை நீக்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக மனு அளித்​தனர்.

அதில் அவர்​கள் தெரி​வித்​துள்​ள​தாவது: ராஜ்​தானி, துரந்​தோ, சதாப்தி மற்​றும் பிரீமி​யம் ரயில்​களில், படிப்​படி​யாக அதி​கரிக்​கும் டைனமிக் கட்டண முறையை நீக்க வேண்​டும். ரயில் பயணி​களுக்​கான முன்​ப​தி​வில் கடைசி​யாக அட்​ட​வணையை வெளி​யிடும்​போது, காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள டிக்​கெட்​களுக்கு ரத்து கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வதை நிறுத்த வேண்​டும்.

அனைத்து ரயில் பெட்​டிகளி​லும் ஒரு மேற்​கத்​திய கழிப்​பறை, 3 இந்​திய கழிப்​பறை என்ற முறையை மாற்​றி, 2 மேற்​கத்​திய கழிப்​பறை மற்​றும் 2 இந்​திய கழிப்​பறை உடைய வடிவ​மைப்பை உரு​வாக்க வேண்​டும்.

அதி​க​மான மெமு ரயில்​களை இயக்​கும் வகை​யில், மதுரை​யில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்​டும். இதுத​விர, திரு​வண்​ணா​மலை ரயில் நிலை​யத்தை புதிய முனைய​மாக்க வேண்​டும். சென்னை – தூத்​துக்​குடி இடையே பகல் நேர அம்​ரித் பாரத் ரயில் இயக்க வேண்​டும் என்று அதில் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த மனு​வில் அகில இந்​திய அளவில் செயல்​படுத்த வேண்​டிய 3 கோரிக்​கைகளும், தமிழகத்​தில் செயல்​படுத்த வேண்​டிய 6 கோரிக்​கைகளும் இடம்​பெற்​றுள்​ளன. மனுவைப் பெற்​றுக்​கொண்ட ரயில்வே அமைச்​சர் கோரிக்​கைகளை ஆய்வு செய்​து, உரிய நடவடிக்​கை எடுப்​ப​தாக கூறினார்.



By admin