இந்தியாவின் இதிகாச காவியமான இராமாயணத்தை தழுவி தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராவணனாக நடித்திருக்கும் ‘ராக்கிங் ஸ்டார்’ நடிகர் யஷ்ஷின் தோற்றத்தை படக்குழுவினர் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, சன்னி தியோல், ரவி துபே, விவேக் ஓபராய், அருண் கோவில், லாரா தத்தா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதில் இராவனேஸ்வரனாக நடிகர் யஷ் நடித்திருக்கிறார். அவருடைய போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் இராவணன் மன்னருக்குரிய ஆடை, ஆபரண அலங்காரத்துடன் தோன்றுவது ரசிகர்களை பரவசமடைய செய்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் எதிர்வரும் நவம்பர் மாதம் எட்டாம் திகதி தீபாவளி திருநாளன்று வெளியாகும் என்றும், அதன் அடுத்த பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதா தேவியாகவும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்ஷின் இராவணேஷ்வரன் தோற்றத்தின் போஸ்டர் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.
The post ‘ராமாயணயம்’ படத்தின் அதிரடி அப்டேட் appeared first on Vanakkam London.