• Mon. Jul 7th, 2025

24×7 Live News

Apdin News

ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும்: பொன் மாணிக்கவேல் கருத்து | Rithanya audio will be key evidence in the case: Pon Manickavel

Byadmin

Jul 7, 2025


திருப்பூர்: இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல் கூறி​னார்.

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி​யில் கணவன் குடும்​பத்​தார் கொடுமை​யால் தற்​கொலை செய்​து​கொண்ட ரிதன்​யா​வின் வீட்​டுக்கு நேற்று சென்ற முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல், ரிதன்​யா​வின் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எனக்​கும் ரிதன்​யா​வின் குடும்​பத்​துக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. ரிதன்யா கடைசி​யாக அவரது தந்​தைக்கு அனுப்​பிய ஆடியோவை கேட்ட பின்​பு​தான், அவர்​களுக்கு ஆறு​தல் கூற வேண்​டுமென தனிப்​பட்ட முறை​யில் நான் இங்கு வந்​துள்​ளேன். ரிதன்யா உயி​ரிழப்​புக்கு முன்பு அனுப்​பிய ஆடியோ மிக​வும் முக்​கிய​மான சாட்​சி​யாக உள்​ளது. ரிதன்யா தரப்பு வழக்​கறிஞரிடம் பேசினேன். முதல் தகவல் அறிக்​கை​யை​யும் படித்​தேன்.

இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும். மன ரீதி​யாக, உடல் ரீதி​யாக யார், யார் துன்​புறுத்​தினர் என அதில் கூறி​யுள்​ளார். ரிதன்​யா​வின் செல்​போன் நீதி​மன்​றத்​தில் முக்​கிய சாட்​சி​யாக வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த சாட்​சி​யத்தை வைத்து விசா​ரித்​தால், ஒரு வாரத்​திலேயே தண்​டனை கொடுத்து விடலாம். பல இடங்​களில் வரதட்​சணைக் கொடுமை​யால் பெண்​கள் இறக்​கிறார்​கள். ஆனால், ரிதன்யா திரு​மண​மான 78 நாட்​களி​லேயே இறந்​துள்​ளார். அது அவரது பெற்​றோருக்கு பெரும் இழப்​பாகும். இந்த வழக்கை காவல் துணைக் கண்​காணிப்​பாளர் விசா​ரித்​துக் கொண்​டிருக்​கிறார். மாவட்ட கண்​காணிப்​பாளர் நேரடி​யாக விசா​ரிக்க வேண்​டும்.

பெண்​களுக்கு இழைக்​கப்​படும் அநீ​தி​களை மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர்​கள் நேரடி​யாகவே விசா​ரிக்​கலாம். விசா​ரணையை ஆடியோ, வீடியோ முறை​யில் பதிவு செய்ய வேண்​டும். திருப்​புவனம் அஜித்​கு​மார் கொலை சம்​பவத்தை நேரடி​யாக உயர் அதி​காரி​கள் விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு பொன் மாணிக்​கவேல் கூறி​னார்.



ntent_bottom">

By admin