• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற புதிய அறிவிப்பு யாருக்கு பொருந்தும்? யாருக்கு விலக்கு?

Byadmin

Sep 15, 2026


ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இனி கட்டணமா? 5 கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, ரூ.5,000 பரிவர்த்தனை செய்தால் 20 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இக்கட்டணம் அதிகபட்சமாக 300 ரூபாயைத் தாண்டாது.

யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான இக்கட்டணங்கள் சாதாரண நுகர்வோரைப் பாதிக்காது.

நுகர்வோருக்கு யுபிஐ சேவை முற்றிலும் இலவசமாக இருக்கும் அதே வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கான திருத்தப்பட்ட ‘வணிகர் தள்ளுபடி விகித’ (எம்.டி.ஆர்) கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வரும் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.

இக்கட்டமைப்பின் கீழ், 2,000 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள 95 சதவீத யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், சிறு வணிகர்களுக்கான பரிவர்த்தனைகளுக்கும் (P2PM) கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, முற்றிலும் இலவசமாக வைக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர்களிடையே யுபிஐ பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு புதிய நிதி உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக என்.பி.சி.ஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எம்.டி.ஆர்-ம், பயனரிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணமும் ஒன்றல்ல என்பதை இங்கே குறிப்பிடுவது மிகவும் முக்கியம்.

By admin