• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

ரூ.272 கோடி லாட்டரி பரிசு – காலக்கெடு முடிய சில மணி நேரமே இருந்த நிலையில் உரிமை கோரிய நபர்

Byadmin

Oct 30, 2026


ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் தகவலின்படி, காலாவதியாக சில மணி நேரங்களே இருந்த நிலையில், C$40 மில்லியன் (சுமார் ரூ.272 கோடி) பரிசுத் தொகையைப் பெற வெற்றியாளர் முன்வந்துள்ளார்.

    • எழுதியவர், மேட்லைன் ஹால்பெர்ட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் தகவலின்படி, காலாவதியாக சில மணி நேரங்களே இருந்த நிலையில், 40 மில்லியன் கனடிய டாலர்கள் (சுமார் ரூ.272 கோடி) பரிசுத் தொகையைப் பெற வெற்றியாளர் முன்வந்துள்ளார்.

ஓ.எல்.ஜி (OLG) ஊடகத் தொடர்பு இயக்குநர் டோனி பிடோன்டி பிபிசியிடம் கூறுகையில், லாட்டரி இயந்திரம் மூலம் அந்தச் சீட்டு சரிபார்க்கப்பட்டது. புதன்கிழமை நள்ளிரவுடன் அதன் காலக்கெடு முடிவடைய இருந்தது என தெரிவித்தார்.

லோட்டோ மேக்ஸ் லாட்டரி சீட்டை வாங்கியவரை அந்த நிறுவனம் நிறுவனம் தேடி வந்தது. கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி ஒன்டாரியோவின் கிரே கவுண்டியில் உள்ள கடையில் அந்தச் சீட்டு வாங்கப்பட்டது. இதற்கிடையில், கிட்டத்தட்ட ஓராண்டு கடந்துவிட்டது.

வெற்றியாளரின் பெயரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. சீட்டின் உண்மையான உரிமையாளர் அவர்தானா என்பதை உறுதிப்படுத்த அவரைத் தொடர்புகொண்டதாக தெரிவித்தது.

“சீட்டின் உரிமையாளர் உறுதி செய்யப்பட்டால், அவரைப் பாராட்டும் நிகழ்ச்சி நடத்தி, அவரது கதையை ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் பகிர்வோம்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



By admin