• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

அர்னாப் புயல்: “30 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிர காற்று” – விவரித்த முதியவர்

Byadmin

Oct 30, 2026


 சின்னி
படக்குறிப்பு, அர்னாப் புயல் குறித்துப் பேசும் சின்னி

    • எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“காற்றின் ஆக்ரோஷமான சத்தம் என்னை மிகவும் பயமுறுத்தியது. 1996-ம் ஆண்டு ஒரு புயல் ஏற்பட்டது. அப்போது நான் பிறக்கவே இல்லை. நான் பிறந்ததிலிருந்து இப்போதுதான் மிகப்பெரிய புயலைப் பார்க்கிறேன்” என்று சின்னி கூறினார்.

“நான் 1953-ம் ஆண்டு ஏற்பட்ட புயலைப் பார்த்திருக்கிறேன். 1996-ம் ஆண்டு ஏற்பட்ட புயலையும் பார்த்தோம். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இவ்வளவு பயங்கரமான காற்று வீசியுள்ளது” என்று 88 வயதான ஜி.வி.வி. சத்யநாராயணா கூறினார்.

மிகத் தீவிரமான அர்னாப் புயலின் தாக்கத்தால் அவர்கள் இருவரும் பெரும் இழப்புகளைச் சந்தித்தனர்.

சத்யநாராயணா, கோனசீமா மாவட்டம், மும்மிடிவரம் மண்டலத்தில் உள்ள சேயேரு குன்னேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்.

நாங்கள் அங்கிருந்து புறப்பட்டபோது, அவரது வீட்டுக்கு நேர் எதிரே ஒரு பெரிய மரம் விழுந்தது.



By admin