• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

குல்சூம் பானோ: 1 வயது குழந்தையை நெஞ்சில் சுமந்தபடி மாரத்தான் ஓடியது ஏன்?

Byadmin

Oct 30, 2026


34 வயது குல்சூம் பானோ

படக்குறிப்பு, 34 வயது குல்சூம் பானோ, குழந்தையை நெஞ்சில் கட்டிக்கொண்டு அரை மாரத்தானில் பங்கேற்றார்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில், தனது குழந்தையை உடலோடு கட்டிக்கொண்டு ஒரு பெண் ஓடத் தொடங்கியது, பலரது கவனத்தை ஈர்த்தது.

குல்சூம் பானோ மாரத்தான் ஓடிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், 34 வயதான அவர் மாரத்தானில் பங்கேற்க முடிவெடுத்ததற்குப் பின்னால் ஒரு கதையும், அவரது விடாமுயற்சியும் இருக்கின்றன.

அக்டோபர் 25-ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் இரண்டு பிரிவுகள் இடம்பெற்றன. 42.195 கிலோமீட்டர் தொலைவுக்கான முழு மாரத்தான் மற்றும் 21 கிலோமீட்டர் தொலைவுக்கான அரை மாரத்தான் ஆகியவை நடைபெற்றன.

இந்த மாரத்தான் போட்டியில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள போலோ மைதானத்தில் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


குல்சூம் பானோவின் கணவர் சிஆர்பிஎஃப் வீரர்.
படக்குறிப்பு, குல்சூம் பானோவின் கணவர் சிஆர்பிஎஃப் வீரர். தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.

குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த குல்சூம் பானோ, தற்போது ஸ்ரீநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 2012-ஆம் ஆண்டு பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் லோனைத் திருமணம் செய்துகொண்டார்.



By admin