• Sun. Jul 6th, 2025

24×7 Live News

Apdin News

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது உண்மையா? ஒரு வரலாற்று ஆய்வு

Byadmin

Jul 6, 2025


ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட்

பட மூலாதாரம், BBC/Getty Images

படக்குறிப்பு, ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட் மற்றும் 14-பிஸ் விமானத்தின் புகைப்படம்.

விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார்? என்பது மிகவும் எளிமையான கேள்வியாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதற்கான பதிலைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல.

விமானத்தை கண்டுபிடித்தது உண்மையில் யார் என்கிற கேள்வி நூறு ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பழைய சர்ச்சையின் வேர்.

சைக்கிள் மெக்கானிக்களாகவும் சுயமாகக் கற்றுக்கொண்ட பொறியாளர்களாகவும் இருந்த ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரை விமானப் பயணத்தின் உண்மையான ‘தந்தையர்’ எனப் பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். 1903 ஆம் ஆண்டில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள் ரைட் சகோதரர்கள்.

ஆனால் முதலில் விமானத்தை இயக்கியவர்கள் என்பதற்கான உண்மையான பெருமை, ஆல்பர்டோ சாண்டோஸ் டுமாண்டிற்குச் செல்ல வேண்டும் என்று பல பிரேசிலியர்கள் கூறுகிறார்கள்.

By admin