• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

லப்பர் பந்து திரை விமர்சனம்: தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பு எப்படி உள்ளது?

Byadmin

Sep 20, 2024


லப்பர் பந்து திரை விமர்சனம்

பட மூலாதாரம், Prince Pictures

படக்குறிப்பு, நடுத்தர வயதுக்காரராக தினேஷும், இளைஞராக ஹரிஷ் கல்யாணும் நடித்துள்ளனர்

ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சுவஸ்விகா, சஞ்சனா உள்ளிட்டோரின் நடிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் 20-ஆம் தேதி அன்று வெளியாகியுள்ளது.

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

ஏற்கனவே கனா, எஃப். ஐ.ஆர் போன்ற படங்களில் இணை இயக்குநராகவும், நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக இந்த படத்தில் அறிமுகமாகிறார்.

கிராமங்களில் இருக்கும் சாதிய, பாலின பாகுபாடுகளை மையமாக்கி கிராமப்புறம் ஒன்றில் செயல்பட்டு வரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் கதையாக படமாக்கப்பட்டுள்ளது லப்பர் பந்து.

By admin