• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

லாரா லூமர்: முஸ்லிம் எதிர்ப்பு, இனவெறி கருத்துகளால் பிரபலமான இவர் யார்?

Byadmin

Sep 16, 2024


லாரா லூமர், டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல்,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லாரா லூமர்

டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பிரசார நிகழ்வுகளில் அவருடன் லாரா லூமர் என்னும் வலதுசாரி சதி கோட்பாட்டாளர் பயணிப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குடியரசு கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைக்குரிய லாரா லூமர், டிரம்ப் மீது செல்வாக்கு செலுத்தக் கூடுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

லாரா லூமர் தனது முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகளுக்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் 9/11 என்னும் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல், அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட “உள் வேலை” என்று கூறியவர். இதுபோன்ற சதி கோட்பாடுகளை பரப்பி பிரபலமானவர்.

கடந்த புதன்கிழமைன்று (செப் 11) நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பை நினைவுகூரும் ஒரு நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார். அவருடன் லாரா லூமரும் கலந்து கொண்டார். இது அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது. சில அமெரிக்க ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியது.

லாரா லூமர், டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல்,
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

செவ்வாய்க்கிழமையன்று, அதிபர் தேர்தல் விவாதத்திற்காக சென்ற டிரம்புடன், 31 வயதான அவரும் பிலடெல்பியா சென்றார்.

By admin