• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

லின்ட்ஸே கிளான்சி: தனது 3 குழந்தைகளை கொன்றதை மறுக்காத தாய் – ‘முடிவுக்கு வர இயலாத வழக்கு’ என அறிவித்த நீதிபதி – அமெரிக்காவை உலுக்கிய வழக்கின் முழு பின்னணி

Byadmin

Sep 6, 2026


லின்ட்ஸே கிளான்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லின்ட்ஸே கிளான்சி

    • எழுதியவர், மேட்லைன் ஹால்பர்டான் மற்றும் சரீன் ஹபேஷியன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் தனது மூன்று இளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி என்ற தாயின் வழக்கை, ‘முடிவுக்கு வர இயலாத வழக்கு’ என்று நீதிபதி அறிவித்தார்

கிளான்சி குற்றவாளியா இல்லையா என்பது குறித்து ஒருமித்த தீர்ப்பை எட்ட முடியவில்லை என்று நடுவர் குழுவினர் (ஜூரி) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது

இந்த அறிவிப்பு, அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பல்வேறு சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுத்துள்ளது.

2023 ஜனவரி 24 அன்று, மாசசூசெட்ஸின் டக்ஸ்பரி நகரில் உள்ள வீட்டில் கிளான்சி தனது குழந்தைகள் கோரா (5), டாசன் (3), எட்டு மாதக் குழந்தை கேலன் ஆகிய மூவரையும் வேண்டுமென்றே கழுத்தை நெரித்துக் கொன்றதாக அரசு தரப்பு குற்றம்சாட்டுகிறது.

அதன்பின்னர், அவர் இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகக் குதித்தார். இதனால் கிளான்சிக்கு முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது 36 வயதாகும் அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே விசாரணையில் பங்கேற்றார்.

By admin