• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

சதம் கடந்த கேப்டன் கிஷன்.. துலீப் கோப்பை இறுதிப்போட்டி முதல் நாள் முடிவில் கிழக்கு மண்டலம் 385 ரன்கள் குவிப்பு

Byadmin

Sep 6, 2026


துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தெற்கு மண்டலம் 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

துலீப் கோப்பை 2026 இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

தெற்கு மண்டலதுடனான இப்போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பேட்டிங்

அதன்படி கிழக்கு மண்டலம் சார்பில் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்கினர்.

37 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்தார். அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

ஷிகர் மோகன் (85), மற்றும் குமார் குஷாக்ரா (63) ஆகியோர் அரைசதம் அடித்தனர். சுதீப் குமார் கராமி மொத்தம் 25 பந்துகளை எதிர்கொண்டு ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தார். குமார் குஷாக்ரா 75 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேப்டன் இஷான் கிஷன் மொத்தம் 135 பந்துகளை எதிர்கொண்டு, 82.22 ஸ்டிரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் சதம் கடந்து 111 ரன்களை எடுத்ததன் மூலம் கவனம் ஈர்த்தார்.

பந்துவீச்சு

எதிரணியில் சாமா மிலிந்த் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஷிகர் மோகன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். ரிபுரானா விஜய், சுதீப் குமார் கராமியை ஆட்டமிழக்கச் செய்தார்.

அதே நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரனை படிக்கல் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் ரன் அவுட் செய்தனர்.

ஆனால் தென் மண்டல அணிக்காக விளையாடிய இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மொத்தம் 14 ஓவர்கள் பந்துவீசி, ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை.

முதல் நாள் முடிவு

முதல் நாள் ஆட்ட இறுதியில் கிழக்கு மண்டலம் 79 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

By admin