• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் – தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

Byadmin

Oct 26, 2026


வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 26-ஆம் தேதி காலை 5.30 மணி நிலவரப்படி, வங்கக்கடலின் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு

அர்னாப் புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26 நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்பிறகு வடமேற்கு திசையில் நகரும் புயல், அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளுக்கு இடையே, பபட்லா – விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும்.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.



By admin